• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மாணவர்களுக்கான சிற்றுண்டி பட்டியல் வெளியீடு…

Byகாயத்ரி

Jul 27, 2022

அரசு பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். இதில் முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.அதன்படி அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்தி 14 ஆயிரத்து 95 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும். மேலும் அனைத்து பள்ளி நாட்களிலும் காலை சிற்றுண்டி உணவு வழங்கப்படும்.

உணவு விவரங்கள்:

திங்கள் – அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்.

செவ்வாய் – ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி.

புதன் – வெண் பொங்கல், ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்.

வியாழன் – அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்

வெள்ளி – ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி + ரவா கேசரி, சேமியா கேசரி.

வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.