• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் பலி..!!

ByA.Tamilselvan

Jul 26, 2022

குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலருக்குசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் பொடாட் மாவட்டத்தில் அதற்கு ஒட்டிய அகமதாபாத் மாவட்டத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2 நாட்களுக்கு முன்பு சிலர் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். இதையடுத்து 40க்கும் அதிகமானவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 18 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.