• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தெரிந்துக்கொள்வோம்

ByAlaguraja Palanichamy

Jul 25, 2022

கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்!

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது!

அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?

அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்- கணவரிடம்/ மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்!

எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது!

துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது! இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!’

கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போது தான் உன் குறையைக் காட்டுகிறது!

நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும்!

அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக் காட்ட வேண்டும் அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது!

இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!’

ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?

இல்லையே…! அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும்!

அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும் இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!