• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை வாங்க மறுக்கும் பெற்றோர்….

Byகாயத்ரி

Jul 20, 2022

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் படித்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் அந்த மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது பெற்றோர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் உடலை பெற்றுக் கொள்ளுமாறு காவல்துறையினர் மாணவியின் பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் உடலை வாங்க மறுத்து, நாங்கள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளோம், எங்களுக்கு இன்று நல்ல முடிவு வரும் என்று கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் மனஉலைச்சலில் இருப்பதாகவும் உண்மையை புதைக்க பலர் திட்டமிடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.