• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பாரதப் பெருந்தலைவர் காமராஜருக்கு மதுரையில் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை…

Byகுமார்

Jul 16, 2022

மதுரையில் பாரதப் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் பல்வேறு சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விளக்குத்தூண் பகுதியில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவசிலைக்கு சிம்மக்கல் நாடார் உறவின்முறை சார்பில் தலைவர் முத்துச்சாமி நாடார் ஆர்.வி.டி ராமையா, தொழிலதிபர் டேனியல்தங்கராஜ் பெரிஸ் மகேந்திரவேல் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் சிம்மக்கல் பகுதியில் இருந்து முளைப்பாரி பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தென் மண்டல செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட செயலாளர்கள் புறாமோகன், கார்த்திக் மற்றும் தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், அதனை தொடர்ந்து கரும்பாலை நாடார் உறவின்முறை சார்பில் கரும்பாலையிலிருந்து மைக்கேல்ராஜ், வேல்முருகன், குட்டி(என்ற)அந்தோணிராஜ் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று அவரது திருவுருவசிலைக்கு மாலை அணிவித்தும் பால் பன்னீர் அபிஷேகம் செய்தனர்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பி ஜே காமராஜ், மாநில பொதுச் செயலாளர் வரதராஜன், பஞ்சாயத்து ராஜ் தலைவர் முத்துக்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அஇஅதிமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழர் தேசிய முன்னணி சார்பில் ஐயா பழநெடுமாறன் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து வர்த்தக காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநகர் தலைவர் வேல்பாண்டி தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டு பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. காமராஜரின் ஆட்சியில் செய்த சாதனைகளை விளக்கும் விதமாக புகைப்பட கண்காட்சி அமைத்திருந்தனர்.