• Wed. Oct 22nd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

காமராஜர் திருவுருவுச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை !

ByA.Tamilselvan

Jul 15, 2022

பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி, திருத்தங்கல் மற்றும் விருதுநகரில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைகளுக்கு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.

பெருந்தலைவர் காமராஜர் 120வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிமுக சார்பாக பல்வேறு இடங்களில் காமராஜர் திருவுருச்சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. சிவகாசி, திருத்தங்கல், விருதுநகரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். சிவகாசி சிவன் கோவில் முன்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா, மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார். சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமி பாண்டியன், சாம் (எ) ராஜா அபினேஷ்வரன், சிவகாசி ஒன்றிய கழக செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, ஆரோக்கியம், வெங்கடேஷ், விருதுநகர் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன், மச்சராசா, விருதுநகர் நகர கழக செயலாளர் நெயினார் முகம்மது, சிவகாசி முன்னாள் நகரக் கழகச் செயலாளர் அசன்பதுருதீன், சிவகாசி மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிலிப்வாசு, தகவல் தொழில் நுட்பப்பிரிவு மாவட்டச் செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சியார்பட்டி முருகன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜி.ஓ.காலனி மாரிமுத்து, சிவகாசி இளைஞரணி ஒன்றிய செயலாளர் கே.டி.சங்கர், விருதுநகர் தகவல் தொழில்நுட்பானியின் நகர செயலாளர் பாசறை சரவணன், நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படம் விளக்கம், 001 , பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசியில் காமராஜரின் திருவுருவ சிலைக்கு கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா மற்றும் நிர்வாகிகள் அருகில் உள்ளனர்.