• Wed. Apr 24th, 2024

தென்காசியில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு…

Byகாயத்ரி

Jul 15, 2022

தென்காசி மாவட்டம் குருவிகுளம் யூனியனு க்கு உட்பட்ட ஆராய்ச்சிபட்டி கிராமத்தில் சுகாதாரதுறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு பணி மேற்கொண்டார். தொடர்ந்து அங்குள்ள பள்ளியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த மூதாட்டி அமைச்சரிடம் எங்கள் கிராமத்தில் இருந்து கழுகுமலை மற்றும் சங்கரன்கோவிலுக்கு செல்வதற்கு முறையான பஸ் வசதி இல்லை என்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். உடனே அமைச்சர் சுப்பிரமணியன் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி உடனே நடவடிக்கை எடுத்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். பின்பு அப்பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த வேலுச்சாமி என்பவரை வீட்டிற்கு சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து மருதங்கிணறு ஊராட்சி மன்றத் தலைவர் சின்னபேச்சிமுத்து (எ) தங்கதுரை தங்கள் கிராமத்தில் பொதுமக்களின் வசதிக்காக துணை சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என்றும் இதனால் சுமார் 6 கிராமங்களை சேர்த்து சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள். மருதங்கிணறு கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என அமைச்சர் சுப்பிரமணியனிடம் கோரிக்கை மனுவை வழங்கினார். அமைச்சரும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். தொடர்ந்து பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.

இதில் தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன், சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, பெரியதுரை, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பிரபாகரன், ராஜகுலராமர்பாண்டியன், இளைஞரணி செந்தில்நாதன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் சுந்தரபாண்டியன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தினகரன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமார்சங்கர், மருதங்கிணறு ஊராட்சி மன்றத் தங்கதுரை, களப்பாளங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய்சங்கர், கலை இலக்கிய பிரிவு கண்ணன், குருவிகுளம் ஒன்றிய துணை செயலாளர் மாடசாமி, அவைத்தலைவர் ஆனந்தராஜ், முணியாண்டி மற்றும் அரசு மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், ஊராட்சி செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *