• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்…

Byகாயத்ரி

Jul 13, 2022

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்டால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் என்ற படத்தை 2 பாகங்களாக எடுத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி செப்டம்பர் 30-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைகா நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, ரகுமான், கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது பொன்னியின் செல்வன் பட குழுவினர் நாளை மாலை 5 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று இணையத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர். அதில் பட்டத்து இளவரசரை தவற விட்டீர்களா? உங்களுக்கான சிறப்பு எங்களிடம் இருக்கிறது என்று பதிவிடப்பட்டுள்ளது. அதோடு நடிகர் விக்ரமின் போஸ்டரையும் அதில் வெளியிட்டுள்ளனர்.