• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Byகாயத்ரி

Jul 12, 2022

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதன்படி, அடுத்த சில மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் கனமழை வரை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.