• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிரியாணி பிரியர்களே உஷார் ! ஒரே கடையில் 45 கிலோ அழுகிய இறைச்சி பறிமுதல்

By

Sep 16, 2021

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 ஸ்டார் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பிரியாணி கடை ,அசைவ ஓட்டல்களில் சோதனை நடத்து வருகின்றனர்.தாமிரம் அடுத்த வேலச்சேரி பிரதான சாலையில் செயல்பட்டு வரும் காரைகுடி பிரியாணி கடையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்தினர்.

அப்போது கெட்டு போன இறைச்சி மற்றும் தரமற்ற உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டது.இதையடுத்து அந்த கடையை தற்காலிகமாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.