• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ரோந்து வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

ByM.maniraj

Jul 7, 2022

கோவில்பட்டி நாலாட்டின்புதூர் சாலையில் ரோந்து சென்ற நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் . எல். பாலாஜி சரவணன் ஆய்வு.
நெடுஞ்சாலை ரோந்து வாகனம் – 5 கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோட்டிலோவன்பட்டி சோதனைசாவடியிலிருந்து கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பருத்திகுளம் சோதனை சாவடி வரை உள்ள சாலைகளில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் நாலாட்டின்புதூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் கொப்பம்பட்டி காவல் நிலைய காவலர் முத்துபாண்டியன் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்படி நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனம் நாலாட்டின்புதூர் to கோவில்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ரோந்து வாகனத்தை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மேற்படி ரோந்து வாகனத்தில் இருந்த டார்ச் லைட், ஒலிப்பெருக்கி (Microphone), சமிக்ஞை விளக்கு (Pattern Light), ஒளிரும் சட்டைகள் (Reflection Jackets), மற்றும் வாகனத்தின் முகப்பு விளக்குகள் (Headlights) ஆகியவற்றை ஆய்வு செய்து நெடுஞ்சாலை ரோந்து வாகன காவல்துறையினருக்கு விழிப்புடனும் கவனமுடனும் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார்.