• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உணவகங்களில் சேவை கட்டணம் வசூல் செய்தால் இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்…

Byகாயத்ரி

Jul 5, 2022

உணவகங்களில் சேவை கட்டணம் வசூல் செய்யக்கூடாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான உணவகங்களில் சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவை கட்டணம் அரசுக்கு செல்வதில்லை என்றும் சேவை கட்டணத்தை உணவகங்களில் வசூல் செய்யக்கூடாது என்றும் மத்திய மாநில அரசுகள் ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஆனால் அதையும் மீறி பல உணவகங்களில் சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் உணவகங்களில் ஹோட்டல்களிலும் வாடிக்கையாளர்களுக்கு அளவில் சேவை கட்டணம் விதிக்க கூடாது என்றும் சேவை கட்டணம் வசூலித்தால் 1915 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.