• Sun. May 10th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

அக்னிபாத் திட்டம்: 2.72 லட்சம் பேர் விண்ணப்பம்..

Byகாயத்ரி

Jul 1, 2022

முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. ஆனாலும் இந்த திட்டத்தை திரும்பப்பெற முடியாது என அரசு உறுதியாக தெரிவித்தது.

அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முப்படைகளும் தொடங்கி உள்ளன. குறிப்பாக விமானப்படையில் பணி நியமனத்துக்கான முன்பதிவு நடவடிக்கை கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஏராளமான இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த 7 நாட்களில் மட்டும் 2.72 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக விமானப்படை தெரிவித்து உள்ளது. வருகிற 5-ந்தேதி வரை முன்பதிவுக்கான கால அவகாசம் இருப்பதால், மேலும் அதிக இளைஞர்கள் விண்ணப்பிப்பார்கள் என விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.