• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

#NeetExam தொடரும் நீட் சோகம்.. மேலும் ஒரு மாணவி தற்கொலை!

நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி செளந்தர்யா தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வினால் மாணவ, மாணவிகள் தொடர்ந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவம் தமிழகத்தில் பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் இந்தாண்டும் நீட் தேர்வு நடைபெற்றது.

நீட் தேர்வு அச்சத்தால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேட்டூரை சேர்ந்த மாணவன் தனுஷ் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் , நேற்று அரியலூர் மாணவி கனிமொழி நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயந்தில் தற்கொலை செய்து கொண்டார். சற்று நேரத்திற்கு முன்பு மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தலையாரம் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருநாவுக்கரசு, ருக்மணி. கூலித் தொழிலாளர்களான இவர்களது மகள் சௌந்தர்யா வயது 17. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீட் தேர்வு எழுதிய இவர், தேர்வு சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது புடவையின் மூலம் தனக்குத் தானே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.