• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விருப்ப ஓய்வில் புதிய முறை.. தமிழக அரசு அறிவிப்பு

ByA.Tamilselvan

Jun 28, 2022

தமிழகத்தில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் கணக்கீட்டு முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வெயிட்டேஜ் கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.முன்னதாக, 54 வயதில் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு 5 ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு 60 ஆண்டுகள் பணிபுரிந்ததாக கருதி, அதனடிப்படையில் மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது, புதிய வெயிட்டேஜ் கணக்கீட்டு முறைப்படி, 55 வயதுக்கு கீழ் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றால் 5 ஆண்டுகள் பணியாற்றியதற்கான வெயிட்டேஜ் கொடுக்கப்படவுள்ளது.அதேபோல், 56 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால் 4 ஆண்டுகளுக்கான வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு, 60 ஆண்டுகள் பணி புரிந்ததாக கருதி ஓய்வூதியம் வழங்கப்படும்.
அதே சமயம், அரசு ஊழியர்கள் 57 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால், 3 ஆண்டுகளுக்கான வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு, 60 ஆண்டுகள் பணி புரிந்ததற்கான ஓய்வூதியம் வழங்கப்படும்.
மேலும், 59 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால் ஒரு ஆண்டுக்கான வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு, 60 ஆண்டுகள் பணிபுரிந்ததாக கருதி ஓய்வூதியம் வழங்கப்படும்.
எனினும், அரசு ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு பெற்ற மாதத்தில் இருந்து மாத சம்பளம் நிறுத்தப்பட்டு விடும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.