• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அதிமுக ஒருங்கிணைப்பாளரர் ஓ.பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்தியதை கண்டித்து மறவர் மகாஜனசபையின் சார்பில் மாபெரும் தர்ணா போராட்டம்..,

ByA.Tamilselvan

Jun 27, 2022

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம் அவமானப்படுத்தப்பட்டதை கண்டித்து ராஜபாளையத்தில் மறவர் மகாஜனசபையின் சார்பில் மாபெரும் தர்ணா போராட்டம் என அதன் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ,3முறை அதிமுக முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம் .கடந்த 23ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அதில் ஓபிஎஸ் ,இபிஎஸ் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் ஓபிஎஸை பேசவிடாமல் இபிஎஸ் ஆதரவாளர்கள் குச்சலிட்டனர். மேலும் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் அவரை அவமானப்படுத்தும் விதமாக அவர் மீது தண்ணீர் பாட்டிலை வீசினர்.மொத்தத்தில் 3 முறை முதல்வராக இருந்த ஓபிஎஸை மரியாதை குறைவாக நடத்தியது பலரை அதிர்ச்சியடைச்செய்தது.தமிழக முழவதும் பெரும் பரபரப்பையும் ஓபிஎஸ்க்கு ஆதரவாக பொதுமக்கள் பேச துவங்கினர்.குறிப்பாக தென் தமிழகத்தில் பொதுமக்களிடையே ஓபிஎஸை அவமானப்படுத்தியதை பொதுமக்கள் கண்டனம் தெரவித்தனர்.
இந்நிலையில் ஓ.பன்னீர்ச்செல்வம் அவமானப்படுத்தப்பட்டதை கண்டித்து ராஜபாளையத்தில் வரும் 30ம் தேதி வியாழக்கிழமை காலை 10மணி அளவில் ஜவகர் மைதானத்தில் மறவர் மகாஜனசபையின் சார்பில் மாபெரும் தர்ணா போராட்டம் என அதன் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.