• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.39
previous arrow
next arrow
Read Now

அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட 3 பேருக்கு கொரோனா…

Byகாயத்ரி

Jun 27, 2022

சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட 3 பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் கலந்து கொண்ட முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட இருவரும் பொதுக்குழு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் நடந்த ஆலோசனைகளில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளருக்கும் கொரோனா தொற்று என தகவல் வெளிவந்துள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.