• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

நிலையூர் பெரிய கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்

ByA.Tamilselvan

Jun 24, 2022

மதுரை நிலையூர் பெரிய கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடைபெறவுள்ளது.
மதுரை அருகேயுள்ளது நிலையூர் கிராமம் . அங்குள்ள பெரிய கண்மாய் மூலம் நிலையூர்,குத்தியார்குண்டு,கருவேலம்பட்டி,சூரக்குளம்,சொக்கநாதன்பட்டி கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் நிலையூர் பெரிய கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலுக்கு நேற்று வேட்பு மனுத்தாக்கல் முடிவுற்றது.

இன்று வேட்மனுக்கள் மீதான பரிசீலினை நடைபெற்றது.இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆர்.ரமேஷ் போட்டியிடுகிறார்.மேலும் உறுப்பினர் பதவிக்கு கண்ணப்பன்,அய்யங்காளை,விஜயலட்சுமி,சுப்பிரமணியன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.எனவே இத்தேர்தர்தலில் தலைவர் ஆர்.ரமேஷ் உட்பட உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அனைவரையும் வெற்றிபெற செய்ய வேண்டும் என கிராமமக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.