• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ்-இபிஎஸ் இரண்டு பேருமே வேண்டாம்…

ByA.Tamilselvan

Jun 17, 2022

கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை வேண்டும் என்றும்,அடுத்த பொதுச்செயலாளர் தேர்வு குறித்து ஓபிஎஸ்,இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் வெடித்து வருகிறது. மேலும் இருவருமே தனித்தனியே ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.அதிமுகவின் எதிர்காலம் என்னாகும் என்ற குழப்பம் நீடிக்கிறது.
இந்நிலையில்ஓபிஎஸ்-இபிஎஸ் இரண்டு பேருமே வேண்டாம் புதிதாக வேறுயாராவது பொதுச்செயலாளராக வரட்டுமே என தொண்டர் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுவருகிறது
இது குறித்து முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி தெரிவிக்கும் போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் கள் பொறுப்பிலிருந்து ஓபிஎஸ்,இ.பி.எஸ் இருவருமே விலகிக்கொள்ளட்டும். என்றார். மேலும் அவர் செய்தியாளர் களிடம் பேசும் போது அதிமுகவில் நடப்பவை வேதனை அளிக்கிறது.ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?ஓபிஎஸ்,இபிஎஸ் க்கு பதில் வேறு யாராவது பொதுச்செயலாளராக வந்தால் பரவாயில்லை.தொண்டர் தங்களுக்கு தேவையான தலைவரை தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறினார்.
மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் பல தொண்டர்களின் எதிர்பார்ப்பு இதுவாகத்தான் இருக்கும் என்றார்