• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

லீவ் கேட்டு மெயில் அனுப்பிய ஊழியர்..
நெட்டிசன்கள் பாராட்டைப் பெற்ற ட்விட்டர் பதிவு..!

Byவிஷா

Jun 16, 2022

சமூக வலைதளங்களில் தலைப்புச் செய்திகளைபோல் தினந்தோறும் ஏதேனும் பதிவுகள் வைரலாகி வந்த வண்ணம் இருக்கின்றன.

தனது மேலதிகாரிக்கு ஊழியர் ஒருவர் வித்தியாசமான கோரிக்கையை முன்வைத்து விடுமுறை கேட்டு மெயில் அனுப்பியதை ஷாஹில் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.


அந்த லீவ் லெட்டரில், வேறொரு நிறுவனத்தில் இண்டெர்வியூக்கு செல்ல இருப்பதால் இன்று விடுமுறை தேவைப்படுகிறது எனக் கேட்டு இதனை அனுமதிக்குமாறு குறிப்பிட்டிருக்கிறார். அந்த மெயிலை பகிர்ந்த ஷாஹில், “என்னுடைய ஜூனியர்ஸ் மிகவும் இனிமையானவர்கள். இண்டெர்வியூ செல்வதற்காக என்னிடம் லீவ் கேட்கிறார்” என கேப்ஷன் இட்டுள்ளார். இதனைக் கண்ட நெட்டிசன்கள், அந்த ஊழியரின் நேர்மை பாராட்டுக்குரியதாக இருக்கிறது என்ற பதிவிட்டு வருகிறார்கள்.


இதுபோக, நல்ல பணிச் சூழல் இருந்த காரணத்தாலேயே அவர் நேர்மையாக உண்மையை கூறி விடுப்பு கேட்டிருக்கிறார். ஆகவே இந்த பாராட்டுகள் உங்களையே சேரும் என அந்த மேலதிகாரியை பாராட்டியிருக்கிறார்கள். தற்போது இந்த ட்வீட்தான் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.