• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

குருவிகுளம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக மீண்டும் கிறிஸ்டோபர் தேர்வு

ByM.maniraj

Jun 14, 2022
நடந்து முடிந்த உட்கட்சி தேர்தலில்  தென்காசி மாவட்டம் குருவிகுளம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக மீண்டும் கிறிஸ்டோபர் தேர்வு பெற்றுள்ளார். பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் , கழக நிர்வாகிகள் அவரை சந்தித்து பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தேர்வு செய்யப்பட்ட குருவிகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிறிஸ்டோபருக்கு சான்றிதழை தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் முன்னிலையில் தேர்தல் ஆணையாளர் செல்வராஜ் வழங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் கிறிஸ்டோபருக்கு சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ஒன்றிய செயலாளர் கிறிஸ்டோபரும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.