• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

புதிய சிக்கலில் டோனி

மத்தியப் பிரதேச கிரிக்கெட் வாரியத்தின் வாழ்நாள் உறுப்பினரான சஞ்சீவ் குப்தா என்பவர், பிசிசிஐ அமைப்புக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்கவுள்ள 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அமைப்பு இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமான முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனிக்கு ‘மென்டார்’ பொறுப்பு கொடுக்கப்பட்டது.
இப்படி கொடுக்கப்பட்ட பொறுப்புக்கு இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச கிரிக்கெட் வாரியத்தின் வாழ்நாள் உறுப்பினரான சஞ்சீவ் குப்தா என்பவர், பிசிசிஐ அமைப்புக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், ‘டோனியை இந்திய அணியின் நிர்வாக பொறுப்பில் நியமித்துள்ளது முரணானது. காரணம், பிசிசிஐ-யின் விதிமுறைகள்படி ஒரு நபர் இரண்டு பொறுப்புகளை வகிக்க முடியாது. தற்போத டோனி, ஐபிஎல் அணியான சி.எஸ்.கே.வின் கேப்டனாக உள்ளார். இப்படி இரண்டு பொறுப்புகளை வகிப்பது விதிகளுக்கு முரணானது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து பிசிசிஐ தரப்பு, தங்களுடைய சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து வருகிறது. புகாரில் தெரிவிக்கப்பட்டது போல டோனியின் நியமனம் விதிகளுக்கு முரணாக இருந்தால் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது.