• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

போக்சோ தண்டனையில் விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைது

ByA.Tamilselvan

May 27, 2022

ஜெயங்கொண்டம் அருகே போக்சோ  சட்டத்தில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம் அடுத்துள்ள  வெ ண்மான்கொண்டான் கிராமம். காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் இளவரசன் என்ற ராம் (42) இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில். ஆயுள் தண்டனை பெற்றவர். உயர் நீதிமன்றம் தண்டனை காலத்தை  ஐந்து வருடமாக குறைத்து. இதை அடுத்து நான்கு வருடம் இரண்டு மாதம் சிறை தண்டனை அனுபவித்து. 2019 வருடம் செப்டம்பர் மாதம் விடுதலையாகியவர். 
நேற்று பிற்பகல் தனது வீட்டின் அருகே ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி மற்றும் அவரது அண்ணனான ஐந்து வயது சிறுவன் இருவரிடம் வீட்டில் பண நுங்கு இருப்பதாகவும் அதை வெட்டி கொடுப்பதாகவும் கூறி இரண்டு குழந்தைகளையும் அழைத்து சென்றவர் சிறுமியிடம் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் குழந்தைகளின் தந்தை விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை சத்தம் போட்டு பெயரைக் கூப்பிட்டு தேடிய போது ராம் வீட்டில் இருந்து சிறுவன் மட்டும் வெளியில் வந்து சிறுமியிடம் ராம் நடந்து கொண்டதை கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதையும்  ராமின் அத்துமீறய செயலையும் அறிந்து சந்தேகப்பட்டு இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து விசாரித்து ராமை போக்சோ சட்டத்தில் மீண்டும் கைது செய்தார்.