• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஒ.பன்னீர்செல்வத்திற்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு

ByA.Tamilselvan

May 25, 2022

ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழகம் சார்பாக அழகாபுரி சந்திப்பில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முன்னாள் முதலமைச்சர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் வருகை தந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு விருதுநகர் மாவட்ட எல்லையான அழகாபுரி சந்திப்பில் விருதுநகர் மேற்கு மாவட்டகழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், திருவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், திருவில்லிபுத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா, முன்னாள் அமைசச்ர் இன்பத்தமிழன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் வசந்திமான்ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுபாஷினி, மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், மாவ்ட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட கழக பொருளாளர் தேன்ராஜன், விருதுநகர் மாவட்ட மாணவரணி மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.கதிரவன், விருதுநகர் மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்தையா, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் முத்துராஜ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் சேதுராமன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிலிப்வாசு, அண்ணா தொழிற்சங்க கௌரவத் தலைவர் குருசாமி, அரசு போக்குவரத்து கழக விருதுநகர் மண்டல செயலாளர் குருச்சந்திரன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.கே.பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சியார்பட்டி முருகன், பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் மகேஸ்வரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன் மாவட்ட இலக்கிய அணி மாவட்ட செயலாளர் தெய்வம், தலைவர் என்.ஜி.ஓ.காலனி மாரிமுத்து, மீனவரணி மாவட்ட செயலாளர் ரெங்கபாளையம் காசிராஜன், விருதுநகர் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன், மச்சராசா, சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, ஆரோக்கியம், லட்சுமிநாராயணன், வெங்கடேஷ், விருதுநகர் நகர கழக செயலாளர் நயினார் முகம்மது, சிவகாசி முன்னாள் நகரக் கழகச் செயலாளர் அசன்பதுருதீன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் மயில்சாமி, வத்ராப் ஒன்றிய கழகச் செயலாளர்கள் சுப்புராஜ், சேதுவர்மன், ராஜபாளையம் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம், சேத்தூர் நகரக் கழகச் செயலாளர் பொன்ராஜ்பாண்டியன், ராஜபாளையம் நகர கழக செயலாளர் பரமசிவம், வக்கீல் துரைமுருகேசன், திருத்தங்கல மேற்கு பகுதி கழக செயலாளர் சரவணகுமார், கிழக்குப் பகுதி கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி மேற்கு பகுதி கழக செயலாளர் கருப்பசாமிபாண்டியன், கிழக்குப் பகுதி கழக செயலாளர் சாம் என்ற ராஜா அபினேஷ்வரன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் குமரேசன், திருத்தங்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் ரமணா, சிவகாசி கிழக்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் மணிகண்டன், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராமராஜ்பாண்டியன், வத்திராயிருப்பு மாவட்ட கவுன்சிலர் மகாலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் கணேசன், விருதுநகர் நகர்மன்ற உறுப்பினர்கள் வெங்கடேஷ், சரவணன், மைக்கேல்ராஜ் , சிவகாசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் கே.டி.சங்கர், நகர இனைஞரணி செயலாளர் கார்த்திக், அம்மா பேரவை செல்லப்பாண்டி மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக, ஒன்றிய கழக, நகர கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் வேஷ்டி, சால்வை அணிவித்து ஒ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.