• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

போட்டித் தேர்வுக்கு டெல்லி வரும் மாணவர்களின் பயணச் செலவு என்னுடையது- எம்.பி.ஆ. ராசா

Byகாயத்ரி

May 16, 2022

போட்டித் தேர்வில் வெற்றிபெற்று நேர்முகத் தேர்வுக்கு டெல்லி வரும் மாணவர்களின் பயணச் செலவை நானே ஏற்கிறேன் என்று நீலகிரி எம்.பி. ஆ.ராசா தெரிவித்தார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் நடத்தப்பட்டு வரும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் வெற்றிபெற்று ஐஏஎஸ் ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு டெல்லிக்கு வருவோரின் செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என நீலகிரி எம்.பி. ஆ.ராசா தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஆய்வுப்எ பணியில் திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஆ.ராசா கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து புஞ்சை புளியம்பட்டியில் திமுக சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்ற இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே ஆ.ராசா கலந்துரையாடினார். அப்போது, இளைஞர்கள் மற்றும் பெண்கள் மாநில மற்றும் மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று அரசு அதிகாரிகளாக தேர்வாகி நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும். நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் திமுக சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு ஐஏஎஸ் ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வு மற்றும் பயிற்சிக்கு புதுடெல்லி வருவோருக்கு ஆகும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் உறுதி அளித்து ஊக்கப்படுத்தி பேசினார்.