• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

உலக செவிலியர் தினம். ஆண்டிபட்டி மருத்துவமனை செவிலியர்களுக்கு மாணவிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து

ஆண்டுதோறும் மே மாதம் 12ஆம் நாள் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது .அதனடிப்படையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு பொது மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு ஆண்டிப்பட்டி லிட்டில் பிளவர் பள்ளி மாணவ மாணவிகள் ஊர்வலமாக வந்து பணியிலிருந்த செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் ,பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகளை வழங்கியும் தங்களது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர் .இதனால் செவிலியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் .

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம் ,முதல்வர் உமா மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் கவிதா ,சிவப்பிரியா ஆகியோர் செய்திருந்தனர். செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்து வாழ்த்துக் கூறிய இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.