• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ஊழியர்கள் இனி 30 நிமிடம் தூங்கலாம்… ‘வேக் ஃபிட்’ நிறுவனம் அறிவிப்பு

Byகாயத்ரி

May 8, 2022

பெங்களூருவை சேர்ந்த ‘வேக் ஃபிட்’ என்ற தலையனை, மெத்தை தயாரிப்பு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 30 நிமிடம் தூங்கும் இடைவேளையை அறிவித்துள்ளது.

அதன்படி ஊழியர்கள் அனைவரும் மதியம் 2 மணி முதல் 2.30 மணி வரை அலுவலகத்தில் தூங்கிகொள்ளலாம். இதற்காக வசதியான படுக்கைகளும், சத்தமில்லாத அறையும் உருவாக்கப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் சி.இ.ஓ சைதன்யா ராமலிங்ககெளடா கூறியதாவது, மதிய நேரத்தில் தூங்குவது நமது ஞாபக சக்தி, படைப்பாற்றல் மற்றும் கவனத்திறனை அதிகரிக்கும். நாசாவின் ஆய்வு ஒன்றில் 26 நிமிட தூக்கம் நமது உழைப்பாற்றலை 33 சதவீதம் அதிகரிப்பதாக கூறுகிறது. ஹார்வேர்ட் ஆய்வு ஒன்று மதிய தூக்கம் நமக்கு ஏற்படும் சோர்வை தடுப்பதாக கூறுகிறது. இதனால் அனைவருக்கும் தூங்கும் இடைவேளை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.