• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வி அடையும்- மம்தா பானர்ஜி உறுதி

ByA.Tamilselvan

May 6, 2022

மத்திய பாஜக அரசு 2024 தேர்தலில் வெற்றி பெறாது. மோடி தோல்வியடைவார் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தபடமாட்டாது.எனவும் மேற்குவங்கமுதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்காள மாநிலம் சிலிகுரியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கொரோனா அலை முடிவுக்கு வந்த உடன் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவோம்’ என்றார்.
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்.
குடியுரிமை திருத்தசட்டம் குறித்து அவர்கள் (பாஜக) பேசுகின்றனர். பிரதமர், முதல்-மந்திரிகளை தேர்ந்தெடுத்தது இந்த நாட்டின் குடிமக்கள் கிடையாதா. சிஏஏ-வில் குறைபாடுகள் உள்ளன. இந்த மசோதாவை அவர்கள் (பாஜக) ஏன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தனர்? குடிமக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நாம் ஒன்றாக இருக்க வேண்டும். ஒற்றுமைதான் நம் வலிமை.
2024-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வரமாட்டார்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச்சட்டம் என எதுவும் அமல்படுத்தப்படாது. அமித்ஷா தலைமறைவாகிவிடுவார். மேற்குவங்காளத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது. உத்தரபிரதேசத்தை பாருங்கள். அங்கு சட்டம் – ஒழுங்கை பார்ப்பது உள்துறை மந்திரியின் வேலை தானே. நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை புல்டோசர் கொண்டு உடைக்க முயற்சிக்காதீர்கள், நெருப்புடன் விளையாட வேண்டாம். சரியான பதிலடியை மக்கள் தருவார்கள்’ இவ்வாறு அவர் பேசினார்.