• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கலைஞர் நினைவிடத்தில் முளைத்த திடீர் கோவில்

தமிழக சட்டசபையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற உள்ள நிலையில் திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் கோவில் கோபுரம் போன்ற அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு முறை கூட தோல்வி அடையாத சட்டமன்ற உறுப்பினர் என்றால் அது திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதிதான். அதுவும் தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் சுமார் முப்பத்தி ஒன்பது ஆண்டு காலம் பதவி வகித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வயது முதிர்ந்த நிலையில் உடல்நலக் கோளாறு காரணமாக கலைஞர் கருணாநிதி காலமானார். இது எடுத்து பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. மேலும் நாள்தோறும் கலைஞரின் நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, கலைஞரின் செல்ல குழந்தை என வர்ணிக்கப்படும் முரசொலி நாளிதழ் அங்கு வைக்கப்படுவது வழக்கம்.

இது குறித்த சில விமர்சனங்கள் எழுந்த போதிலும், தற்போது வரை அந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது வருகிறது. இதேபோல் திமுக தலைவராகவும், முதல்வராகவும் பதவியேற்ற போது முதலில் கலைஞர் நினைவிடத்துக்குச் சென்ற பிறகே மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் முதல்வர் ஸ்டாலின். இதேபோல், திமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கலைஞர் நினைவிடத்தில் நாள்தோறும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தற்போது 2022ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்ற மேலும் பல்வேறு திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று இந்து சமய அறநிலையத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது அதற்கு அத்துறையின் அமைச்சரான சேகர்பாபு பதில் அளிக்க உள்ளார்.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கை விவாதத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை என வெள்ளைப் பூக்களால் எழுதப்பட்டுள்ளது. மேலும் கலைஞரின் உருவப்படத்திற்கு எதிரே பல வண்ணங்களில் கோவில் கோபுரம் ஒன்றும் எழுப்பப்பட்டுள்ளது. இதனை அங்கு வரும் திமுக தொண்டர்களும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் அதனுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.