• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

பீஸ்ட் ஷூட்டிங்கில் சிவாங்கி!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் “பீஸ்ட்” படக்குழுவினர் சிலரை அழைத்து தனது வீட்டில் வைத்து விருந்து கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவித்து நேற்று நெல்சன் டிவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சிவாங்கி பீஸ்ட் படப்பிடிப்பு நடைபெறும் போது படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்று விஜய்யுடன் நின்று புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக பீஸ்ட் படப்பிடிப்பிற்கு பிரியங்கா அருள் மோகன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.