• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இப்டித்தான் என்னோட சண்டே இருக்கும்! – ஐஸ்வர்யா ரஜினியின் வைரல் வீடியோ!

சூப்பர்ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினி, தனது விவாகரத்து குறித்த அறிவிப்பிற்கு பிறகு தன்னை மற்ற விஷயங்களில் மிகவும் பிசியாக வைத்துக் கொண்டு வருகிறார். தனுஷுடனான தன்னுடைய 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் அவரை வைத்து 3 படத்தை இயக்கினார். இந்தப் படம் விமர்சன ரீதியாக சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தை இயக்கி 9 ஆண்டுகள் ஆகின்றன.

இந்நிலையில் தற்போது விவாகரத்து முடிவிற்கு பிறகு உடனடியாக இசை ஆல்பத்தை இயக்கி வெளியிட்டார். தற்போது பாலிவுட்டில் தனது புதிய படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து சோஷியல் மீடியாவிலும் தன்னை மிகவும் ஆக்டிவாக வைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் தன்னுடைய ஞாயிற்றுக்கிழமை எப்படி துவங்கும் என்பது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் ஜிம்மில் பல வொர்க் அவுட்களை வியர்க்க விறுவிறுக்க செய்கிறார். எனர்ஜி பானம் குடிக்கிறார். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறார். காபி குடிக்கிறார். இப்படித்தான் தனது ஞாயிற்றுக்கிழமை காலை விடியும் என்று அந்த வீடியோவில் கேப்ஷனும் வெளியிட்டுள்ளார். அனைவருக்கும் ஹாப்பி சண்டே என்றும் கூறியுள்ளார்.