• Sun. Apr 19th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தாமல் ஒரு நாள் முழு வதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவத்தை உணர வேண்டும்- பிரதமர் பேச்சு

ByA.Tamilselvan

Apr 24, 2022

நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சி யில் முன்னாள் பிரதமர்களுக்கான அருங்காட்சியகத்தின் சிறப்பம்சம் குறித்தும்.கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் நாம் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
மேலும் அவர் பேசும் போது..மார்ச் மாதத்தில் ரூ.10 லட்சம் கோடி வரை யூபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. நாள்தோறும் ரூ.20 ஆயிரம் கோடி ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. சிறிய உணவகங்கள், பழக்கடைகளில் கூட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயல்படுத்தப்படுகிறது. இதனால் பணத்தை எடுத்துச் செல்லவோ அல்லது ஏடிஎம்மை தேடி அலையவோ இனி தேவையில்லை.
ஒரு நாள் முழுவதும் கையில் காசு எடுத்துச் செல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தி முடியும். ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தாமல் ஒரு நாள் முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவத்தை உணர வேண்டும். தொழில்நுட்பத்தின் சக்கி ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர் குறிப்பட்டிருந்தார்.