• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

காத்து வாக்குல ரெண்டு காதல் அப்டேட்!

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாக உள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ‘நானும் ரவுடிதான்’, ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து வெளியிடப்பட்டு ஏற்கனவே ஹிட்டாகியுள்ள டூ டூ டூ பாடலின் புதிய வீடியோ கிளிம்ப்ஸ் நாளை வெளியாகும் என சோனி மியுசிக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஹிட் ஆகியுள்ள இந்த பாடலில் அனிருத் செம்ம ஆட்டம் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.