• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

இணையத்தில் நெல்சனை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு திரையரங்குகளில் வெளியானது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு பீஸ்ட் திரைப்படம் வெளியாகி உள்ளதால், மிகுந்த எதிர்பாபர்ப்புடன் இருந்த ரசிகர்கள் திருப்தி அடையாததால், நெல்சனை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

யோகி பாபு நடித்த கூர்கா படத்தையே பார்த்துடுங்க.. விஜய் நடித்த பீஸ்ட் படத்தை பார்த்தால் மண்டைக் கோளாறு வந்துவிடும் என லாஜிக் ஓட்டைகளை பார்த்து கடுப்பான அஜித் ரசிகர்கள் கமெண்ட் அடித்து கலாய்த்து வருகின்றனர். ஒரு நெட்டிசன்ஸ் வடிவேலுவின் போட்டோவை போட்டு முன்னாடியாவது ஒரு ஆர்மிகிட்டதான் அடி வாங்குவேன் இப்போ எல்லா ஆர்மி கிட்டயும் வாங்குறனே என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். மற்றொருவர் ஒரு நெட்டிசன்ஸ், இரண்டாவது பாதிய நல்லா எடுத்திருந்துருக்காலம். மொத பாதிய எடுக்காமயே இருந்திருக்கலாம் என பயங்கரமாக கலாய்த்து உள்ளார்.

சன் தொலைக்காட்சி விஜய்யின் நேர்காணலை போடும்போதே நினைச்சேன், என்னட இப்படி ப்ரோமேஷன் பண்றாங்களேனு படத்துல ஒன்னுமே இல்லை என்றும், அவன் உருட்டுன உருட்டுல கந்தர்வகோட்டை சமஸ்தானமே தலக் புலக்னு ஆடிப்போச்சி என நெல்சனை பயங்கரமாக நக்கலடித்துள்ளார். மேலும், பீஸ்ட் டிசாஸ்டர் ஹாஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்ய தொடங்கி உள்ளனர்.