நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிய போவதாக அறிவித்த பின்பு, இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முசாபீர் எனும் இசை ஆல்பத்தை இயக்கி வெளியிட்டிருந்த நிலையில், தற்போதும் ஓ சாதிசால் எனும் ஹிந்தி படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்தை இயக்குகிறார்.
இந்தப் படத்துக்கு இளையராஜா தான் இசையமைக்கிறார். எனவே, இளையராஜா மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர். இந்த சந்திப்பு குறித்து இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் உங்களுடன் நேரத்தை செலவிட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க்கையில் பல விஷயங்கள் நடக்கும், எல்லாம் மாறும். ஆனால் ஒன்று மட்டும் மாறாது, அது உண்மையான அன்பு தான். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக, எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.