உலகையே உலுக்கிய ஒரு கொடிய தொற்று என்றால் அது கொரரோனா வைரஸ் தான். எண்ணில் அடங்கா மனிதர்கள் இதனால் பாதிப்புக்குள்ளாகி மரணத்தை சந்தித்தும், கொரோனாவை கடந்தும் வாழந்து வருகின்றனர். இந்த நோய் இன்னும் பல நாடுகளை விட்டபாடில்லை.
அந்த வகையில் இவ்வைரஸ் உருவாகிய சீனாவையே தற்போது சிதைத்து வருகிறது இந்த கொரோனா வைரஸ். சீனாவின் ஷாங்காய் நகரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அங்கு தீவிர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஷாங்காய் நகரில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஊரடங்கின் காரணமாக நகரில் உள்ள இரண்டரை கோடி மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். ஷாங்காய் மக்களுக்குத் தேவையான பொருட்கள் உரிய நேரத்தில் அளிக்கப்படாததால் ஏராளமானோர் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இன்றித் தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வீடுகளை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் உணவு மற்றும் மருத்துவ வசதியின்மை குறித்து புகார் கூறுவதாக ஷாங்காய் நகர மக்கள் ஜன்னல், பால்கனிகளின் வழியே கூச்சலிடும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வோகமாக பரவி வருகின்றன. அதை கேட்கும் போது எல்லோரது நெஞ்சையும் உலக்குகிறது.
ஷாங்காய் நகரின் சில பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாட்டையும் மாறி சூப்பர் மார்க்கெட் ஒன்றை மக்கள் சூறையாட முயற்சித்ததால் கலவரம் வெடித்தது. உணவு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்த சீன அரசு ஜீரோ கோவிட் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. இதன்படி நகரில் உள்ள இரண்டரை கோடி மக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். தொற்று உறுதியானவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தும் மையங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)