• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ரவுடி பேபி ஃபர்ஸ்ட் லுக்!

பல படங்களில் நடித்து வந்த ஹன்சிகாவுக்கு திடீரென படங்கள் சரியாக போகாத நிலையில், முன்னணி நடிகர்களுடன் நடிக்க முடியாமல் போனது! தற்போது, ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இயக்குநர் ராஜ சரவணன் இயக்கத்தில் ஹன்சிகா, ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ரவுடி பேபி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது. பேபி ஒன்று கையில் கத்தியுடன் ஹன்சிகாவை நெருங்கி வர அவர் கையில் ஆயுதத்துடன் அந்த பேபியை தாக்க ஆயத்தமாக உள்ளது போல இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டலாக உள்ளது. இந்த போஸ்டர், ஹாலிவுட்டில் வெளியான சைல்ட்ஸ் பிளே படத்தில் சக்கி போல் உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.