• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நெல்சன் குறித்து ஆர்.வி.உதயகுமாரின் கருத்து!

விஜய் டிவியில் ஷோ ப்ரொட்யூசராக பணியாற்றி வந்த நெல்சன் திலீப்குமார், சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை இயக்க முயன்றார். ஆனால், அந்த படம் டிராப் ஆனது. தொடர்ந்து விடா முயற்சியுடன் உழைத்து வந்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா இயக்கி வெற்றி கொடுத்தார். தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் டாக்டர், விஜய்யுடன் பீஸ்ட் அடுத்ததாக ரஜினியுடன் தலைவர் 169 என அவரது வளர்ச்சி சிறப்பாக உள்ளது.

இந்நிலையில், பிரபல இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், சமீபத்தில் “கற்றது மற” எனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இயக்குநர் நெல்சன் குறித்து அவர் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இப்போ கிளம்பி வரும் போது தம்பி ஒருத்தர் போன் பண்ணியிருந்தார் எடுத்தேன். அண்ணே வணக்கம்னே.. டைரக்டர் யூனியன்ல கார்டு வாங்கிட்டேன்ணே.. கார்டு நல்லா சூப்பரா நயத்துடன் இருக்குன்னு சொன்னாரு.. சரி தம்பி நீ யாருப்பான்னு கேட்டேன்.. நான் தான் சார் நெல்சன்.. இப்போதான் விஜய் படம் ஒண்ணு பண்ணியிருக்கேன்னு சொன்னாரு.. எவ்வளவு பணிவா இருக்காங்க பாருங்க.. நெல்சனை மாதிரி இயக்குநர்களை நான் போற்றவும் பாராட்டவும் கடமைப்பட்டிருக்கிறேன். எந்த இடத்துக்கு போனாலும், வந்த இடத்தை மறந்துடக் கூடாது என இயக்குநர் உதயகுமார் நெல்சனை பற்றி பேசியுள்ளார்.