• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

காவி முதல் கூர்கா வரை … என்ன தான் சொல்ல டிரை பண்றாங்க

விஜய்யின் பீஸ்ட் ட்ரைலர் வெளியாகி உள்ள நிலையில் பல நெகடிவ் விமர்சனங்கள் எழுந்துள்ளது.நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

நேற்று மாலை 6 மணியளவில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ட்ரெய்லரில் மாலில் சிக்கி தவிக்கும் மக்களை சோல்ஜர் ஆக உள்ள விஜய் தீவிரவாதிகளிடம் இருந்து அவர்களை காப்பாற்றுவது போல் இதில் நடித்துள்ளார்.

மேலும் ட்ரைலரில் விஜய் பேசிய வசனங்கள் அரசியல் சார்ந்ததாக 90 காலகட்டத்தில் ரஜினி பேசிய அதே பாணியை பின்பற்றி தற்போது விஜய் சினிமாவில் ரசிகர்களிடையே முன்னேறி வருகிறார் என்று கூறினால் அது மிகையாகாது.சமீபத்தில் கூட மிகப் பிரமாண்டமான முறையில் பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டுவிழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் இவர் ஏதாவது கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் ஒரு அரசியல் பேசி பிரச்சனையை ஆரம்பித்து விடுவார்.படத்தின் விளம்பரத்தை இது அதிகபடுத்தினாலும் எதற்கு தேவை இல்லாத தலை வலி என்று தான் சன் பிக்சர் இதனை தவிர்த்துள்ளது.

ஆனாலும் பீஸ்ட் படத்தினை பார்த்த நெட்டிசன்கள் பலர் கூர்கா படத்தின் இரண்டாம் பாகம் உள்ளது.அதுவும் யோகி பாபு , விஜய் வரும் காட்சிகள் ஏற்கனவே பார்த்த மாதிரி இருப்பதாகவும் கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் விஜய்யின் அறிமுக காட்சி ஒரு காவி துணியை கூர்மையான கத்தி கொண்டு கிழிக்கும் காட்சிகள் மூலம் விஜய் தேசிய அரசியல் ஏதோ ஒன்றை நய்யாண்டிதனமாக கூற முயற்சிக்கிறார். இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் கமென்ட் மற்றும் கதை உருட்ட இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் ட்ரைலரை வைத்து விமர்சனம் செய்யாதீர்கள் என பதிலடி கொடுத்து வருகின்றனர். பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.