• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விக்ரம் புகழ்ந்த நடிகர் யார்?

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மகான்”. இந்த படத்தில் நடிகை சிம்ரன், நடிகர் பாபி சிம்ஹா, சனத் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேமில் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியானது. 50 -வது நாள் வெற்றிகரமாக ஓடிடியில் ஓடி கொண்டிருப்பதால் சீயான் விக்ரம் நன்றி தெரிவித்துள்ளதை கார்த்திக் சுப்புராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் “வாழ்க்கையில் நாம் விரும்பி செய்த ஒரு விஷயம் வெற்றியை தொடும்போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. மகானில் நடித்த ஒவ்வொரு நொடியும் என் மனதில் இன்றும் ஒரு ‘sweet’ கனவாய் நிற்கிறது. அதே மகான் நான்கு மொழிகளில் அனைவரும் கண்டு ரசித்த ஒரு பிரமாண்ட வெற்றி படம் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

அப்படியே ஒரு வியக்கத்தக்க கேன்வாசில் மகானை கொண்டு போய் நிறுத்திய கார்த்திக் சுப்புராஜின் கைவண்ணம், எனக்கு அன்பாய் வழங்கிய சுதந்திரம், சின்ன சின்ன விஷயங்களை ரசித்து வழி நடத்திய விதம்.. அழகு. நன்றிகள் பல்லாயிரம்.

பாபிக்கு thanx. நீ இல்லாமல் என் சத்யா சாத்தியமே இல்லை. சிறப்பாக நடிப்பது தனக்கொரு இயல்பான talent-னு மீண்டும் சுட்டி காட்டிய சிம்ரனுக்கு thank you.த்ருவ். தனக்குள் இருக்கும் திறமையையும், தனித்துவத்தையும் வெளியே கொண்டு வந்து சவாலாக இமேஜ் தாண்டியதிற்கு.. hats-off மகனே. வியர்வை, ரத்தம், (நிஜமான) கண்ணீர் சிந்தி மகானின் வெற்றிக்கு உழைத்த மகான் gangற்கு ஒரு பெரிய salute.

எங்களுடன் ‘நீயா, நானா’ என்று வெறியோடு போட்டி போட்டு கலக்கிய சனா, ஷ்ரேயெஸ், தினேஷ்.. Rock on! மகானை நிஜமாக்கிய தயாரிப்பாளருக்கும், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இல்லங்களிலும், உள்ளங்களிலும் கொண்டு சேர்த்த அமேசான் பிரைம் வீடியோவுக்கும் a big thank you” எனத் தெரிவித்துள்ளார்.