• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சூர்யா 41 – அதிகாரபூர்வ அறிவிப்பு!

பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் திரைப்படங்களில் சூர்யா நடித்து இருந்தார். இந்த இரண்டு படங்களும் நடிகர் சூர்யாவிற்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இதையடுத்து சுமார் 18 வருடங்களுக்கு பிறகு சூர்யாவும் பாலாவும் இணைந்துள்ளனர். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது. இந்த படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்கிறார். வாடிவாசல் படத்திற்கான டெஸ்ட் ஷூட் சென்னை புறநகரில் சமீபத்தில் நடைபெற்றது. இதனால் சூர்யாவின் 41வது படம் வாடிவாசலா அல்லது பாலா படமா என கேள்வி எழுந்தது.

இந்நிலையில், நடிகர் சூர்யாவின் 41வது படத்தை பாலா இயக்குகிறார் என நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.