• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மனைவி, குழந்தைகளுடன் பைக்கில் சென்றவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

இருசக்கர வாகனத்தில் சென்ற போது நிலை தடுமாறி மரத்தில் மோதியதில்
சம்பவ இடத்தில் ஒருவர் பலி; மூவர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் காயத்தார் அருகே கடையம்பட்டியை சேர்ந்தவர்
செல்லமுத்து (32) இவர் மனைவி மற்றும் இரண்டு
குழந்தைகளுடன் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியில் தனது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, நிலைதடுமாறி
சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. வீரபாண்டியபுரம் அருகே நடந்த இந்த கோர விபத்தில் தலையில் படுகாயம் அடைந்த செல்லமுத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். அவருடன் பைக்கில் சென்ற மனைவி செண்பகபிரியா, மகன் சூரியபிரசாத்(6) மகள் மதிபால (5) பலத்த
காயங்களுடன் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.