• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மகன் ஹீரோ! அம்மா இயக்குனர்!

தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ்! கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற போவதாக அறிவித்தனர். இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து தனுஷ் அவரது பட வேலைகளில் பிசியாக உள்ளார். ஐஸ்வர்யாவும் தனது ஆல்பம் பாடல் இயக்குவதில் மும்முரமாக இருந்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ராக் வித் ராஜா என்ற லைவ் கார்ன்செர்ட்டில் தனுஷ் தனது இரு மகன்களுடன் கலந்து கொண்டார்.

அந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. ஐஸ்வர்யா தனது தற்போது 15 வயதாகும் மூத்த மகன் யாத்ராவை ஹீரோவாக வைத்து படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்!