• Fri. Apr 26th, 2024

பாகுபலி, மாஸ்டர் சாதனைகளை முறியடித்த ஆர்ஆர்ஆர்…

ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர், ஆலியாபட், அஜய்தேவ்கன் உள்ளிட்டோர் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம் மார்ச் 25ம் தேதியான நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 550 க்கும் அதிகமான தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

ராம்சரண், ஜுனியர் என்டிஆர் இருவரும் அல்லூரி சீத்தாராம ராஜு மற்றும் கொமாரம் பீம் என்ற இரண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் ரோலில் நடித்துள்ளனர். ராம்சரணின் காதலியாக ஆலியாபட் நடித்துள்ளார். சுமார் 550 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் அனைத்து தரப்பிடமும் பாசிடிவ் விமர்சனங்களை இந்த படம் பெற்றுள்ளது.

முதல் நாளில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 120 கோடிகளை வசூலித்துள்ளது. தமிழகத்தில் கிட்டதட்ட 10 கோடிகளையும், கர்நாடகாவில் 14 கோடிகளையும், கேரளாவில் 4 கோடிகளையும், இந்தியில் 25 கோடிகளையும், வெளிநாடுகளில் 75 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 702,480 டாலர்களையும், நியூசிலாந்தில் 69, 741 டாலர்களையும் வசூல் செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் விஜய்யின் மாஸ்டர், பாகுபலி இரண்டு பாகங்களின் வசூல் சாதனைகளை ஆர்ஆர்ஆர் முறியடித்துள்ளது.

அமெரிக்காவில் முதல் நாளிலேயே 5 மில்லியன் டாலர் கிளப்பில் ஆர்ஆர்ஆர் படம் இணைந்துள்ளது. The lost City, The Batman ஆகிய படங்களில் வசூல் சாதனையையும் ஆர்ஆர்ஆர் தவிடு பொடியாக்கி உள்ளது. அமெரிக்காவில் இதுவரை மூன்று தெலுங்கு படங்கள் தான் முதல் நாளில் 4 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகையை வசூல் செய்துள்ளன. அவை பாகுபலி, பாகுபலி 2, தற்போது ஆர்ஆர்ஆர். இவை மூன்றுமே ராஜமெளலி இயக்கிய படங்கள் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *