லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2002ல் வெளியான படம் ரன். அதுவரை சாக்லேட் பாயாக இருந்த மாதவனை ஆக்ஷன் ஹீரோ லிஸ்டில் சேர்த்தது இந்தப் படம். மீரா ஜாஸ்மின் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், விவேக், ரகுவரன், அனுஹாசன், அதுல் குல்கர்னி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். படம் சிறப்பான வசூலை பெற்றது. படத்தில் வித்யாசாகர் இசையில் பாடல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன. இந்நிலையில் ஏறக்குறைய 20 ஆண்டுகள் கழித்து படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தற்போது தி வாரியர் என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் லிங்குசாமி எடுத்து வருகிறார். இந்நிலையில் லிங்குசாமியின் சகோதரரும் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தியவருமான சுபாஷ் சந்திரபோஸ் வெயிட்டிங் பார் ரன் 2 என்று சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து ரன் 2 படம் உருவாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாதவன் பிசியாக நடித்து வருகிறார். இதேபோல மீரா ஜாஸ்மீனும் மீண்டும் நடிக்க வந்துள்ள நிலையில் இவர்களை வைத்தே படம் எடுக்கப்படுமா அல்லது புதியவர்களை கொண்டு எடுக்கப்படுமா என்றும் பேசப்பட்டு வருகிறது.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)