• Sun. Apr 28th, 2024

இளைஞரிடம் 10லட்சம் பணம் பறித்த பெண் காவல் ஆய்வாளர் கைது

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவரிடம் நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்த பெண் ஆய்வாளர் வசந்தி என்பவர் 5 கூட்டாளிகளுடன் சேர்ந்து ரூ 10 லட்சம் பணம் பறித்ததாக போலிசார் வழக்குபதிவு செய்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு போலிசார் விசாரணை செய்து வருகின்றனர் .

இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக வழக்கில் தொடர்புடைய பால்பாண்டி, செட்டியார் என்ற உக்கிரபாண்டி, கார்த்திக் என்ற சீமைச்சாமி ஆகிய 3பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 2லட்சத்தி 26ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டனர் . .

இதனிடையே பெண் ஆய்வாளர் வசந்தியின் சார்பில் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். இருப்பினும் மனு மீதான விசாரணையின் போது உடனடியாக குற்றம்சாட்டப்பட்டதால் மனுவை தள்ளுபடி செய்து காவல்துறையினருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது .

இதையடுத்து வசந்தி தலைமறைவு ஆனதால் தனிபடையினர் தேடி வந்த நிலையில் செல்போன் நம்பரை சோதனை செய்து பார்த்த போது வசந்தி அவரது சகோதரர் குண்டு பாண்டியராஜ் ஆகிய இருவரும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பதுங்கி இந்தது தெரியவந்நது . இந்நிலையில் இருவரையும் கைது செய்து மதுரை அழைத்துவந்தனர்

.இன்று காலை மருத்துவமனையில் பரிசோதனை செய்த பிறகு இருவரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது வசந்தி மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பான விசாரணை உள்ளதால் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கண்ணன் என்ற வழக்கறிஞர் குறுக்கீட்டு மனு அளித்தார்.

இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் ஆய்வாளர் வசந்தி மற்றும் அவரது சகோதரர் பாண்டியராஜ் ஆகிய இருவருக்கும் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி அனுராதா உத்தரவிட்டு தீர்பை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *