• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வெளியானது கோல்ட் டீசர்!

அல்போன்ஸ் புத்ரன் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கியுள்ள கோல்ட் படத்தின் டீசர் நேற்று வெளியானது.
‘நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார். சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் பஹத் பாசிலை வைத்து பாட்டு என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். ஆனால் அதற்கு முன்னதாக இப்போது பிருத்விராஜ் நடிக்கும் கோல்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கோல்ட் படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது. இந்த டீசர் இப்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.