• Tue. Apr 30th, 2024

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக…
பெண் ஒருவருக்கு ‘துபாஷ்’ பொறுப்பு..!

Byவிஷா

Mar 22, 2022
தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக துபாஷி பொறுப்புக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது
தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் 18ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. வரும் 24ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. ஏற்கனவே  மார்ச் 18 ஆம் தேதி நிதிநிலை அறிக்கையும், 19ந்தேதி வேளான் பட்ஜெட்டும் தாக்கல் செய்த நிலையில், நேற்று (21ந்தேதி) முதல் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்தில் முதல் முறையாக துபாஷ் பொறுப்புக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் இந்த பொறுப்பில் ஆண்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது முதல் முறையாக ராஜலட்சுமி என்ற 60 வயது பெண் நியமிக்கப்பட்டுள்ளார். வருகின்ற மே மாதம் பணியிலிருந்து ராஜலட்சுமி ஓய்வு பெற உள்ள நிலையில், அவருக்கு   துபாஷ் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அனைவர் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
துபாஷ் பொறுப்பு என்பது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து தொடரும் ஒரு நடைமுறை. சபாநாயகர் பதவியை கவுரவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது. தற்போதுவரை தொர்கிறது. இவரது (‘துபாஷ்’) பணியானது  சட்டமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இருந்து சபாநாயகர் சட்டமன்றம் வரை செல்லும் போது முன்னே செல்வார். அதன்பின்னர், சபாநாயகர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியில் காத்திருப்பார். இதனைத் தொடர்ந்து, மீண்டும் சபாநாயகர் அவர் அறைக்குச் செல்லும்போது துபாஷ் பொறுப்பில் இருப்பவர் உடன் செல்வார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *