• Sun. Apr 28th, 2024

உபி எம்எல்ஏக்களில் 51% பேர் மீது கிரிமினல் வழக்குகள்..

சமீபத்தில் நடந்த தேர்தலில் 18வது உத்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு இரண்டாவது எம்எல்ஏவும் பாலியல் பாலாத்காரம் உள்ளிட்ட குற்றப் பின்னணி கொண்டவர்கள் என, அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின்படி அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து கடந்த 10ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக பல இடங்களில் முன்னிலையும் சுமார் 270க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து சாதனை படைத்தது. இதேபோல் பஞ்சாப் தவிர மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி உ.பி. சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று உபி முதல்வராக யோகி ஆதித்யநாத், மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய அரசியலை தீர்மானிக்கும் உத்தரப்பிரதேசம் ஒரு முக்கியமான மாநிலம் ஆகும்.

உ.பி.யில் வெற்றி பெற்றவர் இந்தியாவை வெல்வார் என்று அடிக்கடி சொல்லப்படுவது வழக்கம். அந்த அளவுக்கு உபி தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தேர்தல் மட்டுமல்லாமல் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியை உத்திர பிரதேசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பாஜக, தொடர்ந்து 2017ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. மொத்தமுள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில், பாஜக 312 இடங்களை வென்றது. இதேபோல சமாஜ்வாதி, பகுஜன் சாமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் குறிப்பிடத்தகுந்த இடங்களில் வென்றுள்ளது.

158 வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 39% பேர் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளனர். ADR இன் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததில் ஐந்து எம்.எல்.ஏ.க்கள் மீது கொலை வழக்கும், 29 பேர் மீது கொலை முயற்சி வழக்கும், 6 பேர் மீது பலாத்காரம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிஜேபியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 255 எம்எல்ஏக்களில் 90 பேர் (35%) கடுமையான கிரிமினல் வழக்குகளைக் கொண்டுள்ளனர் என்றும், அதைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியின் 111 எம்.எல்.ஏ.க்களில் 48 பேர் அதாவது, 43 சதவீதமும், ஆர்எல்டியைச் சேர்ந்த எட்டு பேரில் ஐந்து பேரும், சுஹேல்தேவின் ஆறு பேரில் நான்கு பேர் குற்ற பின்னணி கொண்டர்வகள் என்றும் தரவு காட்டுகிறது. இதேபோல் பாரதிய சமாஜ் கட்சி, நிஷாத் கட்சியில் நான்கு பேர், அப்னா தளம் (சோனேலால்) கட்சியில் இருவரும், ஜனசத்தா ஜன்சத்தா தளம் லோக்தந்திரிக் மற்றும் காங்கிரஸிலிருந்து தலா இருவர், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் குற்றபின்னணி கொண்டவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *