• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வெளியானது தனுஷின் மாறன்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மாறன்’ திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. தனுஷ் ரசிகர்கள் படம் பார்ப்பது தொடர்பான ஸ்கிரின் சாட்டுகளை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாறன்”. இந்தப்படத்தின் டிரெய்லரை ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து வெளியிட்டனர். முதல் முறையாக நடிகர் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்பட டிரெய்லரை, டிவிட்டர் தளத்தின் புதிய வசதியை பயன்படுத்தி ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து வெளியிட்டனர்.

“மாறன்” திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் TG தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சமுத்திரக்கனி, கிருஷ்ண குமார், மாஸ்டர் மகேந்திரன், ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் நரேனுடன் இணைந்து ஷர்பு மற்றும் சுஹாஸ் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.